விஜய்க்காக 'ஸ்கெட்சை' மாற்றிய விக்ரம்

  • IndiaGlitz, [Thursday,September 14 2017]

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் மொத்தமாக ரிலீஸ் ஆகும். அப்போது ஆன்லைன் பைரசி, திருட்டுடிவிடி போன்ற தொல்லைகள் இல்லாததால் சுமாரான படங்கள் கூட 100 நாட்கள் ஓடுவது என்பது சாதாரணமாக இருந்தது

ஆனால் தற்போது ஆன்லைன் பைரசி காரணமாக ஒரு படத்தின் அதிகபட்ச வசூலை ஒரு வாரத்தில் எடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களின் வசூல் மிக முக்கியம். எனவேதான் ஒரே நேரத்தில் முடிந்தவரை அதிகளவிலான திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

இந்த காரணத்தினால்தான் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது  தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்ரம், தமன்னா நடித்த 'ஸ்கெட்ச்' படத்தை முதலில் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தீபாவளி தினத்தில் 'தளபதி' விஜய்யின் 'மெர்சல் திரைக்கு வருவதை அடுத்து விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மெர்சல், ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கெட்ச் படக்குழுவினர் இந்த மாற்றத்தை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More News

'விவேகம்' இடத்தை பிடித்த மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அரியலூர் மாணவி ரங்கீலா கல்விக்கட்டணம். விஜய் ரசிகர்களின் அதிரடி முடிவு

அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாக கூறி பின்னர் ஏமாற்றிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே

கனடா கல்லூரியில் விஜய்சேதுபதியின் வெற்றிப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்தா? கமல்ஹாசனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதன்முதலாக பிகினி உடையில் பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்த வைத்த நடிகை டாப்சி, அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.