விஜய்க்காக 'ஸ்கெட்சை' மாற்றிய விக்ரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் மொத்தமாக ரிலீஸ் ஆகும். அப்போது ஆன்லைன் பைரசி, திருட்டுடிவிடி போன்ற தொல்லைகள் இல்லாததால் சுமாரான படங்கள் கூட 100 நாட்கள் ஓடுவது என்பது சாதாரணமாக இருந்தது
ஆனால் தற்போது ஆன்லைன் பைரசி காரணமாக ஒரு படத்தின் அதிகபட்ச வசூலை ஒரு வாரத்தில் எடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களின் வசூல் மிக முக்கியம். எனவேதான் ஒரே நேரத்தில் முடிந்தவரை அதிகளவிலான திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இந்த காரணத்தினால்தான் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்ரம், தமன்னா நடித்த 'ஸ்கெட்ச்' படத்தை முதலில் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தீபாவளி தினத்தில் 'தளபதி' விஜய்யின் 'மெர்சல் திரைக்கு வருவதை அடுத்து விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மெர்சல், ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கெட்ச் படக்குழுவினர் இந்த மாற்றத்தை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments