'பொன்னியின் செல்வன்': விக்ரம் நடித்த அட்டகாசமான கேரக்டரின் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம் நடித்த அட்டகாசமான கேரக்டரின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார் என்பதும், இந்தப் படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், இராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி ஆகியோர் நடித்து வரும் நிலையில் சற்றுமுன் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரமின் புதிய அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Welcome the Chola Crown Prince! The Fierce Warrior. The Wild Tiger. Aditya Karikalan! #PS1 ??@madrastalkies_ #ManiRatnam pic.twitter.com/UGXEuT21D0
— Lyca Productions (@LycaProductions) July 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments