விக்ரம் குடும்பத்தில் இருந்து திரையுலகம் வரும் இன்னொரு நபர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். ஒரு கேரக்டருக்காக அதிக மெனக்கிடும் ஒருசில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இன்றைய இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக இன்னும் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது
இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம், தற்போது 'ஆதித்யா வர்மா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக் படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விக்ரம் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் திரையுலகிற்கு வந்துள்ளார். அவர்தான் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர். தற்போது தயாராகி வரும் 'எப்போ கல்யாணம்' என்ற படத்தில் இவர் வில்லனாக நடித்து வருகிறார். காதல், சோகம், நகைச்சுவை அம்சங்கள் அடங்கிய இந்த படத்தை இருதயராஜ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து இயக்குனர் இருதயராஜ் கூறியதாவது:
பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர். இதற்கு ‘எப்போ கல்யாணம்’ படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout