விஜய்யின் 'மாஸ்டர்' சாதனையை உடைத்தது 'விக்ரம்': எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இதுவரை ஒரு முக்கிய சாதனையை தக்க வைத்திருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ‘மாஸ்டர்’ படத்தின் தமிழக வசூலில் இருந்து மட்டும் 85 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்தது. இதுவொரு சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனையை கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

ஏற்கனவே கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றிகரமாக வசூல் ஆகி வருகிறது என்பதும் இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்த திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை ‘விக்ரம்’ திரைப்படம் தக்க வைத்துக் கொண்டு செல்லும் என்றும் அந்த சாதனையை முறியடிக்க இன்னொரு திரைப்படம் வருமா என்று சந்தேகமே என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.