விக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

விக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர், நடிகைகளை நட்சத்திரம் என்று அழைத்தால் அபூர்வமான பிறவி நடிகர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்கலாம். அந்த வகையில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பீனிக்ஸ் பறவை போல் அவ்வப்போது தோல்வியில் இருந்து மீண்டு இன்று கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள சீயான் விக்ரமை துருவ நட்சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள் சீயான் விக்ரமுக்காகவே உருவாக்கப்பட்டது போல் சில கேரக்டர்களில் அவர் நடித்துள்ளதை இந்த கட்டுரையில் பார்ப்போம்

சேது:

விக்ரம் என்ற நட்சத்திரத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்த சேது கேரக்டர்தான். பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்த படம் பாலாவுக்கும் விக்ரமுக்கும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்.

தில்:

தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் விக்ரமுக்கு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோ என்ற பெருமையை பெற்று தந்தது. போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் உள்ள இளைஞருக்கு அதே போலீஸால் ஏற்படும் சோதனைகள் தான் இந்த படத்தின் கதை

காசி:

உண்மையாகவே பார்வை இல்லாத ஒருவர் இந்த கேரக்டரில் நடித்திருந்தால் கூட இந்த படம் இந்த அளவுக்கு இயல்பாக வந்திருக்குமா? என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தான் எடுத்து கொண்ட கேரக்டராகவே மாறிவிடுவதில் சிவாஜி, கமலுக்க்கு பின்னர் விக்ரம்தான் என்று நிரூபித்த படம் காசி

தூள்:

மீண்டும் தரணியுடன் விக்ரம் இணைந்த படம். தளபதி விஜய் மிஸ் செய்த படம் என்றும் கூறுவதுண்டு. ஆக்சன், காமெடி, கமர்சியல் என அனைத்து அம்சங்களும் சம அளவில் கலந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது

சாமி:

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் போலீஸ் கேரக்டரின் அறிமுக காட்சி போல் என்னுடைய படத்தில் இருந்தது இல்லையே என நான் பலமுறை நினைத்ததுண்டு என்று ரஜினியே பாராட்டிய படம் தான் சாமி. நெல்லை பின்னணியில் உருவான இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக்சன் படமாக விளங்கியது

பிதாமகன்:

சேதுவுக்கு பின் மீண்டும் பாலாவுடன் இணைந்த விக்ரமுக்கு இந்த படம் தேசிய விருதினை பெற்று கொடுத்தது. விக்ரம் மட்டுமின்றி சூர்யாவுக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்தது

அந்நியன்:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் விக்ரம் இணைந்த முதல் படம். மல்டிபிள் பெர்சனாலிட்டி கதையம்சம் கொண்ட இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும் விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது

இராவணன்:

விக்ரம் நடித்த ஒருசில தோல்வி படங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும் விக்ரம் இந்த படத்தில் வீரய்யா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்.

தெய்வத்திருமகள்:

6 வயது சிறுவனின் பெர்சனாலிட்டி கேரக்டரில் விக்ரம் நடித்த இந்த படம் அவரது நடிப்பிற்கு மேலும் ஒரு மகுடத்தை சேர்த்தது. விக்ரமால் எந்த கேரக்டரையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த படம் இது.

ஐ:

அந்நியன் படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்த படம் இது. ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டுமா? அல்லது குறைக்க வேண்டுமா? அல்லது இரண்டையும் ஒரே படத்திற்காக செய்ய வேண்டுமா? அதைச் சற்றும் யோசிக்காமல் விக்ரம் இந்த படத்திற்காக செய்தார். விக்ரமின் அர்ப்பணிப்பு மட்டுமே இந்த படத்தை வெற்றிப்படமாக்கியது

இருமுகன்:

லவ் என்ற கேரக்டரை விக்ரம் தவிர வேறு யாராவது செய்திருக்க முடியுமா .என்பது சந்தேகமே. அந்த கேரக்டரின் பாடி லாங்குவேஜ் மற்றும் ஸ்டைல் இன்னும் படம் பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளே இருப்பதுதான் அவருடைய வெற்றி

 

விக்ரம் தற்போது சாமி 2 மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நிச்சயம் இந்த படத்திலும் அவர் தனது கேரக்டருக்காக 100% உழைத்திருப்பார் என்பது உண்மை. உண்மையான கடுமையான உழைப்பாளிகளுக்கு வெற்றி கிட்டியே தீரும் என்பதற்கு விக்ரம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவரது வெற்றி தொடர இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை எங்களுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

ரஜினி-கமல் அரசியல்: சிம்புவின் ஆதரவு யாருக்கு?

உலக நாயகன் கமல்ஹாசன் தனி அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண்

ஆர்யா நடத்தி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் ஒருவரை ஆர்யா தனது மனைவியாக தேர்வு செய்யவுள்ளார்

இணையத்தை கலக்கும் சச்சினின் நள்ளிரவு வீடியோ

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சினின் நள்ளிரவு வீடியோ ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தை கலக்கி வருகிறது.

சண்முகப்பாண்டியன் கையில் அடங்கிய விஜயகாந்த் கண்கள்

திரைத்துறையில் 40 ஆண்டுகாலம் சேவை செய்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் பிரபல இயக்குனர்கள் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீரெட்டிக்கு எதிராக கிளம்பிய உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக நடிகைகளை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் தெலுங்கு திரையுலகமே பரபரப்பில் உள்ளது.