close
Choose your channels

ஒரே படத்தில் கமல், விக்ரம், விஜய்சேதுபதி? 

Tuesday, August 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே படத்தில் கமலஹாசன், விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து ஒரே படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி நடித்த ’பேட்ட’, கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடித்து வரும் ’விக்ரம்’, மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ உள்பட பல திரைப்படங்களில் பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பதும் அந்த படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ’தேவர்மகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும் பிரபல மலையாள இயக்குனர் மற்றும் எடிட்டர் மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் தன்னுடைய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது மகனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ’தேவர் மகன்’ படத்தில் நடித்த வில்லன் நாசரின் மகன் கேரக்டரில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment