'விக்ரம்' படத்துடன் கனெக்சன் ஆன 'சூர்யா 42': வேற லெவல் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்துடன் தற்போது உருவாகி வரும் ’சூர்யா 42’ படம் கனெக்சன் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான செட் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு மேக்கப் கலைஞராக செரீனா டிக்ஸிரியா என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவின் ’ரோலக்ஸ்’ கேரக்டருக்கு மேக்கப் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோலக்ஸ் கேரக்டரின் கெட்டப் மிகச் சிறப்பாக இருந்ததை அடுத்து சூர்யா தனது சமூக வலைதளத்தில் மேக்கப் கலைஞர் செரீனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சூர்யாவின் 42வது படத்திலும் செரீனா மேக்கப் கலைஞர் ஆக இணைந்ததை அடுத்து இந்த படத்திற்கு வேற லெவல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments