பிரபாஸ் ஜோடியாகும் விக்ரம், சிம்பு பட நடிகைகள்..!

  • IndiaGlitz, [Saturday,August 19 2023]

பிரபாஸ் நடித்த 'பாகுபலி’ மற்றும்’ பாகுபலி 2’ ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு பின்னர் அவர் நடித்த ’சாஹோ’ ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘ஆதிபுருஷ்’ ஆகிய மூன்று படங்களும் தோல்வி அடைந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் சிம்பு படத்தில் நடித்த நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் நடிப்பில் மாருதி என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ’ராஜா டீலக்ஸ்’. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் என்றும் கூறப்படுகிறது.

தற்போது விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ என்ற படத்தில் நாயகி ஆக மாளவிகா மோகன் நடித்து வருகிறார். அதேபோல் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நிதி அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் தற்போது ‘கல்கி 288 ஏடி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அதன் பிறகு ’ராஜா டீலக்ஸ்’ படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More News

நல்லவனா இருந்தா கடைசி வரைக்கும் நல்லா இருக்க முடியாது: யோகிபாபுவின் 'லக்கிமேன்' டிரைலர்..!

யோகி பாபு காமெடியனாக நடித்த பல திரைப்படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் சில படங்களும் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று வருகின்றன என்பதை

மீண்டும் போலீஸ் கேரக்டர்.. மீண்டும் அனிருத்.. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'காக்கிச்சட்டை' என்ற திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போலீஸ்

அஜித்துடன் நடிக்க ஆசை.. 'ஜெய்லர்' பட மாஸ் நடிகர் பேட்டி..!

அஜித்துடன் நடிக்க ஆசை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெய்லர்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மாஸ் நடிகர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

நடிகை அசோக்செல்வன் சகோதரியா இவர்? ஹீரோயின் போல் இருக்காரே..!

நடிகர் அசோக்செல்வன் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இவர் ஹீரோயின் போல் அழகாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.  

'வேற மாதிரி ஒரு சாண்டியை பார்ப்பீங்க.. 'லியோ' படத்தில் நடித்ததை உறுதி செய்த சாண்டி..!

நடன இயக்குனர், நடிகர் சாண்டி மாஸ்டர், 'லியோ' படத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.