விக்ரமின் மிரட்டும் கெட்டப்.. பா ரஞ்சித் படத்தின் டைட்டில் டீசர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய டீஸர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த டீசர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத அளவில் விக்ரமின் மிரட்டும் தோற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் கோவணம் மட்டும் அணிந்து இருக்கும் விக்ரம் தோற்றம் மற்றும் அவரது கூர்மையான பார்வை அலற வைத்துள்ளது. இந்த கேரக்டரின் கம்பீரம் அவரது தோற்றத்தில் இருந்தே தெரிய வருகிறது.
அதேபோல் இந்த படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் மற்றும் பசுபதியின் தோற்றமும் இதுவரை இல்லாத அளவில் தெறிக்க வைத்துள்ளது. நடிகை பார்வதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த டைட்டில் டீசரை பார்க்கும்போதே, இயக்குனர் பா ரஞ்சித் வேற லெவலில் ஒரு படைப்பை ரசிகர்களுக்கு கொடுக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷின் இசையில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ’தங்கலான்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படம் கிஷோர்குமார் ஒளிப்பதிவில் செல்வா ஆர்கே படத்தொகுப்பில் உருவாகின்றது.
Behold! Witness #ChiyaanVikram in #PaRanjith's #Thangalaan ✨Produced by #KEGnanavelRaja
— Studio Green (@StudioGreen2) October 23, 2022
A #GVPrakashKumar Musical@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @thehari___ pic.twitter.com/Tprwp4c0rc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com