விக்ரம் - பா ரஞ்சித் திரைப்படத்தின் டைட்டில் இதுவா? படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாக உள்ளன.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், விக்ரமின் 61வது திரைப்படமான இந்த படம் ஒரு ஒரு பாடிபில்டிங் விளையாட்டு வீரர் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மைதானம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17 அன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும் தற்போது ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது .

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கிய ’சார்பட்டா பரம்பரை’ என்ற குத்துச்சண்டை வீரர்கள் கதையம்சம் கொண்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த பாடிபில்டிங் கதையம்சம் கொண்ட படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.