சாவுக்கு துணிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை: 'தங்கலான்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,July 10 2024]

விக்ரம் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆங்கிலேயர் கால கட்டத்தில் ஆன கதை, அற்புதமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள், ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை ஆகியவற்றோடு விக்ரமின் அபூர்வ தோற்றம் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தின் ஆவலை அதிகரித்துள்ளது.

மாளவிகா மோகனின் சூனியக்காரி கேரக்டர், தங்கம் எடுப்பதற்காக உயிரை பணயம் வைக்கும் ஏழை எளிய மக்கள், அவர்களை அடிமைப்படுத்தும் ஆங்கிலேயர்கள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘தங்கலான்’ இருக்கும் என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளன.

இந்த படத்தின் டிரைலரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து அறிவிப்பு இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் ஆஜராக வேண்டும் என்று பிரபல நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியன் - 2 படத்தின் மீதான வழக்கு.. சுபாஷ்கரன், கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 படக்குழுவுக்கு மதுரை மாவட்ட உரிமையியல்  நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் குருதி பூஜை & ஆன்மீக ரகசியங்கள் - புதுக்கோட்டை நசீம் அம்மா பேட்டி | ஆன்மீகக்ளிட்ஸ்

பிரபல மாந்திரீகர் புதுக்கோட்டை நசீம் அம்மா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆன்மீகம் மற்றும் மாந்திரீகம் சார்ந்த பல கேள்விகளுக்கு தெளிவான விடையளித்துள்ளார்.

சன் டிவியில் புதிய சீரியல்.. ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

சன் டிவியில் புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த சீரியல் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பும் வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு பின் பாடகி சைந்தவி எடுத்த அதிரடி முடிவு.. என்ன செய்தார் தெரியுமா?

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.