விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’மகான்’ என்று அறிவிக்கப்பட்டு அதுகுறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது என்பதும், மேலும் இந்த படத்தின் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்ரம் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த படத்தில் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விக்ரம், துருவ் விக்ரம், பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மகான்"#Chiyaan60 is #MAHAAN https://t.co/66ym8g6E2o#மகான் #Chiyaan #DhruvVikram @7screenstudio @lalit_sevenscr @music_santhosh @kshreyaas @vivekharshan @actorsimha @SimranbaggaOffc @DineshSubbaray1 @sherif_choreo @kunal_rajan @Stylist_Praveen @tuneyjohn @vanibhojanoffl pic.twitter.com/thBFRGKQkh
— karthik subbaraj (@karthiksubbaraj) August 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments