'விக்ரம்', 'ஜெயிலர்' நடிகர் ஜாபரின் காதலியா இவர்? ரஜினிகாந்த் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,August 21 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜாபரின் காதலி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாவ கதைகள்’ என்ற ஆந்தாலஜி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜாஃபர். இதனை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் வில்லனாக நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் அசத்தலாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஜாபரிடம் ரஜினிகாந்த் எப்போது திருமணம் என்று கேட்டபோது தன்னுடைய காதலியின் புகைப்படத்தை காட்டியதாகவும் உங்கள் காதலியை அழகாக இருக்கிறார் என்று சொல்லி ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய காதலியை ஒருநாள் அழைத்து வந்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றதாகவும் அப்போது தனது காதலி ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார் என்றும் அந்த பேட்டியில் ஜாஃபர் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜாஃபர் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.