'துருவ நட்சத்திரம்' படத்தின் செம்ம வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் நீண்ட வருடமாக கிடப்பில் இருந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் தூசு துடைக்கப்பட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த படம் சென்சார் ஆகிவிட்டதாகவும் ’யூஏ’ சான்றுகள் பெற்றதாகவும் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ஒன்றை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அட்டகாசமாக விக்ரமின் காட்சிகள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இவ்வளவு ஒரு நல்ல படத்தை எப்படி இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டார்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
#DhruvaNatchathiram in theatres from November 24, 2023#TrailBLAZEr now
— Gauthamvasudevmenon (@menongautham) September 23, 2023
▶️https://t.co/ewq1KijC8M#DhruvaNatchathiramFromNov24@chiyaan @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru @Preethisrivijay @SonyMusicSouth @DoneChannel1 @proyuvraaj @gobeatroute pic.twitter.com/nmqM6winuT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com