மகனுடன் 'கோப்ரா' படம் பார்த்த விக்ரம்: ரசிகர்கள் உற்சாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இன்று அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டு இருந்த நிலையில் முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு அருகே உள்ள திரையரங்கில் இன்று விக்ரம் தனது மகன் துருவ் உடன் ‘கோப்ரா’ படத்தை ரசிகர்கள் முன்னிலையில் பார்த்தார். விக்ரமை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ’சியான் சியான்’ என கரகோஷம் எழுப்பியதால் தியேட்டரே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் மட்டுமின்றி இந்த படத்தில் பணிபுரிந்த ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, அஜய் ஞானமுத்து, உள்பட பலரும் முதல் காட்சியை பார்க்க வந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படம் உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் விக்ரமின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Fans of #ChiyaanVikram welcome @chiyaan & #DhruvVikram to theatres for the first time in three years with #Cobra ❤️??#CobraFromToday @AjayGnanamuthu @arrahman @7screenstudio @RedGiantMovies_ @Udhaystalin @IrfanPathan @SrinidhiShetty7 @proyuvraaj pic.twitter.com/yIZTUvAB7Z
— Ramesh Bala (@rameshlaus) August 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com