தனுஷ் - விக்ரம்: ஒரே நேரத்தில் 2 படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய இரு நடிகர்களின் படங்கள் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இன்னொரு படம் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தனுஷ் பாடிய உள்ளதாகவும் ’சீக்கிரம் விடுவோமா ’என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விக்ரம் நடித்த ’தங்கலான்’ படத்தின் சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய இருவரது படங்களின் அப்டேட் அடுத்தடுத்து ஜிவி பிரகாஷ் கூறியதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Nilavukku ennadi en mel kobam …. First single in D voice …. Seekiram viduvoma …. #NEEK …
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2024
Laaney…. Thangalaaney … next single arriving soon #thangalaan
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments