close
Choose your channels

விக்ரமன் - அமுதவாணன் சண்டை: இந்த வாரத்தின் குறும்படம் இதோ!

Thursday, November 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் தினமும் சண்டை சச்சரவுகள் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் எதிர் அணியினர்களிடம் போடும் சண்டைகள் நியாயம் இல்லாதவை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உள்ளே இருந்து வெளியே வரும் பொருட்களை எடுக்க இரு அணியில் உள்ளவர்களும் தயார் நிலையில் இருக்கும்போது விக்ரமன் தனது அணியினரை வெளியே வாருங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஆனால் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே நடந்த சண்டையின்போது விக்ரமன் தனது அணியை வெளியே வாருங்கள் என்று கூறவே இல்லை என அமுதவாணன் கூறுகிறார்.

இந்த சண்டை முற்றி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் நானே குறும்படம் போட சொல்கிறேன், நீங்கள் வெளியே வர சொல்லவே இல்லை என்று அமுதவாணன் அடித்துக் கூறுகிறார். ஆனால் விக்ரமன் தான் தனது அணியினர்களை வெளியே வாருங்கள் என்று கூறினேன் என்றும், அது மக்களுக்கு தெரியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் குறும்படம் போடுவதற்கு முன்பே நெட்டிசன்கள் குறும்படத்தை போட்டு வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோவில் விக்ரமன் தனது அணியினரை பின்னால் வாருங்கள் இப்படி இருந்தால் எப்படி அவர்கள் செல்வார்கள் என்று கூறுகிறார். அப்போது அமுதவாணனும் அருகில் தான் இருக்கின்றார். இதனை அடுத்து அமுதவாணனை இந்த வாரம் கமல்ஹாசன் வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment