மர்ம மனிதனின் பாடல் கம்போஸிங்கை தொடங்கிய ஹாரீஸ் ஜெயராஜ்
- IndiaGlitz, [Saturday,January 09 2016]
சீயான் விக்ரம் தற்போது "ஸ்பிரிட் ஆப் சென்னை' என்ற வீடியோவை இயக்குவதில் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ள விக்ரமின் அடுத்த படத்தின் பாடல் கம்போஸிங் பணியை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் நேற்று முதல் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10 முதல் தொடங்கவுள்ளது.
'மர்ம மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று கூறப்படும் இந்த படத்தில் முதல்முதலாக விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். மேலும் நித்யாமேனன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.