முடிவடையும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் உள்ள பிரமாண்டமான செட் ஒன்றில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக வரும் ஜனவரிக்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் ஜோடியாக கமலின் மகள் அக்சராஹாசன் நடித்து வரும் இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரமின் 56ஆவது படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' டிரைலர் ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது

விஜய்க்காக ரிஸ்க் எடுக்கும் சாய்பல்லவி

நடிகை சாய்பல்லவியை இன்னும் மலர் டீச்சராகவே பலர் நினைத்து வருகின்றனர். அந்த கேரக்டர் மீதான மரியாதை காரணமாக சாய்பல்லவி தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

கார்த்தியின் 'தேவ்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'தேவ்'. இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அனங்கே சிணுங்கலாமா?

எம்.எல்.ஏ மீது நடிகை போலீஸ் புகார்

தெலுங்கு நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.