'கோப்ரா' சென்சார் தகவல், ரன்னிங் டைம் இவ்வளவா? படக்குழு எடுக்கும் அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் சென்சார் செய்த பின் 2 மணி 55 நிமிடங்கள் என ரன்னிங் டைம் உள்ளது. இந்த ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதாக படக்குழுவினர் கருதுவதாகவும், அதனால் படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘கோப்ரா’ படத்தின் சென்சார் பணிகள் முடிந்ததையடுத்து புரமோஷன் பணியை தீவிரப்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுவதை அடுத்து புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
CERTIFIED ??#ChiyaanVikram's #Cobra all set to hit screens Worldwide On August 31 ??#CobraFromAugust31 @chiyaan @AjayGnanamuthu @arrahman @RedGiantMovies_ @Udhaystalin @SonyMusicSouth pic.twitter.com/l1NScSFvYK
— Seven Screen Studio (@7screenstudio) August 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments