விக்ரமின் 'கோப்ரா' பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமுற்றார். இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இர்பான் பதான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் தனது குழந்தைக்கு சுலைமான் கான் என்று பெயர் வைத்துள்ளதாகவும் குழந்தை மற்றும் தாயார் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை இர்பான் பதான் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Safa and me welcome our baby boy SULEIMAN KHAN. Both baby and mother are fine and healthy. #Blessings pic.twitter.com/yCVoqCAggW
— Irfan Pathan (@IrfanPathan) December 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com