close
Choose your channels

'லியோ' படத்தில் இணைந்த 'விக்ரம்' நடிகை.. ஒரே ஒரு காட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியவர்..!

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் ஒரே ஒரு காட்சி மற்றும் பகத் பாசில் உடன் ஒரே ஒரு காட்சியை நடித்த நடிகை தற்போது ’லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஒரு காட்சி, பகத் பாசிலுடன் ஒரு காட்சி நடித்தவர் நடிகை மாயா கிருஷ்ணன்.

மதுரையைச் சேர்ந்த இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ’விக்ரம்’ படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ’விக்ரம்’ படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்திருந்தாலும் அந்த கேரக்டரை லோகேஷ் கனகராஜ் சூப்பராக வடிவமைத்திருந்தார் என்பதும் அதுதான் அவரது கேரக்டர் ரசிகர்கள் பிரபலமானதற்கு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து லோகேஷ் இயக்கி வரும் ’லியோ’ படத்திலும் மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘லியோ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ்க்கு எனது நன்றி என்றும் தளபதி விஜய் எப்போதும் தனக்கு ஸ்பெஷல் என்றும் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment