'விக்ரம்' பட நடிகையின் வயிற்றில் சரமாரியாக குத்தும் ஜிம் பயிற்சியாளர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,May 16 2022]

கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தில் நடித்த நடிகையின் வயிற்றில் ஜிம் பயிற்சியாளர் சரமாரியாக குத்தும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விக்ரம்’ படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேற்று வெளியான டிரைலரிலும் இவரது காட்சிகள் இருந்தது . ஏற்கனவே மிஷ்கின் நடித்த ‘சவரக்கத்தி’, ஜீவாவின் ’கீ’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் நடிகை சுவஸ்திகா தனது சமூக வலைத்தளத்தில் ஜிம்மில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் காட்சியின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஜிம் பயிற்சியாளர் உடன் அவர் ஆவேசமாக மோதும் காட்சிகளும், பயிற்சியாளர் அவரது வயிற்றில் குத்தும் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

தோழியின் திருமணத்தில் ராஷ்மிகா மந்தனா: கலர்ஃபுல் புகைப்படங்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

நடிகை கஸ்தூரியா இது? வேற லெவல் கிளாமர் புகைப்படம்

 நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன .

இரண்டாம் பாகமாகும் அருண்விஜய்யின் ஹிட் படம்!

நடிகர் அருண் விஜய் நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியை அறையில் பூட்டி சுற்றி சுவர் கட்டிய சைக்கோ கணவன் கைது!

ஆந்திராவைச் சேர்ந்த சைக்கோ கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை வீட்டில் பூட்டி வைத்து, அறையை சுற்றி சுவர் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை: 'விக்ரம்' ஆடியோ விழாவில் பா ரஞ்சித்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை என்ன என்பதை கூறியுள்ளார்