'போட்றா வெடியை': 'தளபதி 67' படத்தில் இணைகிறாரா 'விக்ரம்' நடிகர்?

  • IndiaGlitz, [Saturday,September 03 2022]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட ஆறு வில்லன்களும், த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தின் முதல் பாதியை ஆக்கிரமித்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருடன் பகத்பாசில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் இதில் ‘தளபதி 67’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைக்கப்பட்டுள்ளதால், பகத்பாசில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

சில நாட்களுக்கு முன் பகத் பாசிலுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என்று லோகேஷ் கனகராஜ் இடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’விரைவில் இணைவோம்’ என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வேட்டையாடு விளையாடு 2': கமல் கேள்விக்கு கவுதம் மேனன் கூறிய பதில்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

'குக் வித் கோமாளி' புகழுக்கு இது இரண்டாம் திருமணமா? முதல் திருமண புகைப்படம் வைரல்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

அஜித்துடன் இமயமலையில் பைக் பயணம்: மஞ்சுவாரியர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

நடிகர் அஜீத் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தனது நண்பர்களுடன்

'இது நடந்தால் மட்டுமே இரண்டாம் பாகம்; 'வெந்து தணிந்தது காடு' குறித்து கெளதம் மேனன்

 சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டிரைலர் நேற்று

டிஸ்சார்ஜ் ஆனதும் படப்பிடிப்புக்கு செல்லும் பாரதிராஜா? எந்த படம் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு