சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் மகேஷ்பாபு தற்போது ’சர்க்கார் வாரி பாட்டா’ மற்றும் ’மேஜர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் விக்ரம் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அவர் வில்லன் வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதும், இந்த செய்திகள் அனைத்துமே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் வெளியான ’மகான்’ திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த விக்ரம் தற்போது ’கோப்ரா’ ’பொன்னியின் செல்வன்’ ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.