10 எண்றதுக்குள்ள டூயட் இல்லாத காதல் படம். விக்ரம்

  • IndiaGlitz, [Friday,October 16 2015]

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

இந்த பிரஸ் மீட்டில் விக்ரம் பேசியதாவது: இந்த படம் ஜனரஞ்சகமான படமாகவும், யதார்த்தமான படமாகவும் இருக்கும். இந்த இரண்டையும் ஒரே படத்தில் அமைப்பது என்பது அவ்வளவு எளிதான் விஷயம் கிடையாது. எங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

விஜய் மில்டன் என்னை முதன்முதலாக சந்தித்து இந்த படத்தின் ஒன்லைனை கூறியது முதல் படத்தை முடிக்கும் வரை நாங்கள் இருவருமே பாசிட்டிவ் மூடில் இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் என்னுடைய கேரக்டரும், சமந்தாவின் கேரக்டரும் ரொம்ப வித்தியாசமாக அமைந்த கேரக்டர்கள். படம் முழுவதும் காதல் இருக்கும். ஆனால் இந்த படத்தில் டூயட் கிடையாது, ஐ லவ் யூ என்ற வசனம் கிடையாது..

நான் எந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கின்றேனோ அதைவிட அதிகமாக சினிமாவை நேசிப்பவர் விஜய்மில்டன். இவர் ஒரு இயக்குனர் மட்டுமின்றி ஒரு நல்ல டெக்னீஷியனும் கூட என்பது சிறப்பம்சம்.

இந்த பிரஸ்மீட்டில் விஜய் மில்டன், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More News

ரஜினியின் 'லிங்கா'வுடன் கனெக்ஷன் ஆகும் தனுஷின் 'தங்கமகன்'?

இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'தங்க மகன்'...

வேதாளம் பாடல்கள் விமர்சனம்

அஜீத் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' படப்பாடல்கள் நேற்று ரிலீஸ் ஆகி...

விஜய்யின் தந்தை இயக்கத்தில் நடிக்கும் விஜய்?

விஜய்யின் 59வது படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் தந்தை இயக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது...

கமல்ஹாசனின் 'தூங்காவனம்' ரிலீஸ் தேதி?

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத் நடித்த 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...

'வேதாளம்' படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர்

அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' படத்தின் கதை கிட்டத்தட்ட பாட்ஷா பாணியில் இருப்பதாக கூறப்படுகிறது...