close
Choose your channels

'விக்ரம்' 100வது நாள்' செம பிளான் போட்டுள்ள கமல்ஹாசன்!

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரும் போட்டி போட்டுக்கொண்டு இந்த படத்தில் நடித்த நிலையில் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட படம் பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்தின் இசை மிக அபாரமாக பின்னணி இசையுடன், லோகேஷ் கனகராஜின் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 'விக்ரம்’ படம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில் 100வது நாளை மிக சிறப்பாக கொண்டாட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா நவம்பர் 7ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

'விக்ரம்’ படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இருவரும் இணைந்து நடத்தும் இந்த வெற்றி விழாவில் 'விக்ரம்’ படத்தில் பணியாற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விழா நடைபெறும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment