'இருமுகன்' படத்தின் சஸ்பென்ஸ் கதை இதுதானா?

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் திருநங்கையாக நடித்துள்ளதாக வெளிவந்த தகவலையும், அதனை இயக்குனர் ஆனந்த் சங்கர் மறுத்துள்ளதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் 'திருநங்கை'யின் ஹார்மோன்களை கெமிக்கல்ஸ் மூலம் மாற்றி அவர்களை இனமாற்றம் செய்வதுதான் இந்த படத்தின் மெயின் கதை என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் இந்த படத்தில் முதன்முதலில் இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கேரக்டர் 'ரா' அதிகாரியாகவும், இன்னொரு கேரக்டர் சஸ்பென்ஸ் ஆகவும் வைக்கப்பட்டுள்ளதாகவும் விக்ரமின் இரண்டாவது கேரக்டரை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அந்த கேரக்டர் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விக்ரமுடன் முதல்முறையாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.