விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தலைப்பு

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

'கும்கி' படத்தில் அறிமுகமாகிய விக்ரம் பிரபு அதனை அடுத்து அரிமாநம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இவன் வேற மாதிரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் வாஹா, வீரசிவாஜி ஆகிய படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் 'சுந்தரபாண்டியன்', இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த படத்தின் டைட்டில் 'முடிசூடா மன்னன்' என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே வில்லன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில்...

தஞ்சை விவசாயிக்கு குவியும் திரையுலக உதவிகள்

தஞ்சை விவசாயி பாலன் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் அவரை காவல்துறையினர் தாக்கியதாக...

'24' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி-நேரம்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ''24'' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை...

'மாப்பிள்ளை சிங்கம்' திரைவிமர்சனம் - டைம் பாஸ் காமெடி படம்

விமல் நடித்த கிராமிய பின்னணி கொண்ட படங்களில் 'மாப்பிள்ளை சிங்கம்' படமும் ஒன்று. ஒரு சீரியஸான விஷயத்தை கூட நகைச்சுவை மூலம் சிந்திக்க வைக்கும்....

விஷால்-மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர்

'கதகளி' படத்தை அடுத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கவிருந்த விஷால், பின்னர் திடீரென...