விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

  • IndiaGlitz, [Friday,March 25 2016]
சீயான் விக்ரம் தற்போது அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக விக்ரம், நயன்தாரா நடித்து வரும் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்து வரும் நிலையில் விக்ரமின் அடுத்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெறவுள்ளது.

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாக உள்ல 'கருடா' படத்தின் பூஜைதான் நடைபெறவுள்ளது. விக்ரம், காஜல் அகர்வால் முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் கிரிநாத் என்ற இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 'இருமுகன்', 'கருடா' என இரண்டு படங்களிலும் விக்ரம் மாறி மாறி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நடிகர் சங்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெருமையை சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்...

நயன்தாராவின் பேய்ப்படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் மற்றொரு...

தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

கும்கி இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

12 இந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் சமுத்திரக்கனி படம்

கடந்த 2012ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'சாட்டை' என்ற சமூக அக்கறை அம்சங்கள் நிறைந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை...

முதன்முதலாக மூன்று வேடங்களில் ஜெய்

ஜெய், சுரபி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான 'புகழ்' திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஜெய் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்...