சினிமாவுக்கு வருகிறாரா சின்ன கேப்டன் விஜயபிரபாகரன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ’சகாப்தம்’ மற்றும் ’மதுரைவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது அவர் ’மித்திரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இதுவரை பிசினஸ் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அவர் சினிமாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏனெனில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 5.40க்கு வெளியாக இருப்பதை அடுத்து முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயபிரபாகரன் ஒரு பாடகரா? என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் விஜயகாந்த் ரசிகர்கள் அவர் விரைவில் சினிமாவுக்கும் வரவேண்டும் என்றும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். சின்ன கேப்டன் விஜயபிரபாகரன் சினிமாவுக்கு வருவாரா? அல்லது அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் அரசியலிலேயே நீடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜயபிரபாகரன் முதல் முறையாக பாடிய, தனி இசைப்பாடலின் (Independent Music) First look நாளை மாலை 5.40 மணிக்கு எனது டிவிட்டர் (@iVijayakant) பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.#IndependentMusic pic.twitter.com/JWee6pERJM
— Vijayakant (@iVijayakant) December 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments