மும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரிரு வாரத்தில் முடிவடையவுள்ளதால் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், சக போட்டியாளர்களை வெளியேற்றவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்.

மேலும் இதுநாள் வரை ஒருசிலர் போட்டுவந்த வேடமும் கலைந்துவிட்டது. குறிப்பாக மும்தாஜின் அன்பு நாடகம் புதியதாக வந்த விஜயலட்சுமி மற்றும் ரித்விகாவால் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

அதேபோல் அடுத்த வார எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பிக்க போட்டியாளர்கள் ராஜதந்திரம், மோசடி, பணிவு உள்பட அனைத்து முறைகளையும் கையாள தொடங்கிவிட்டனர். செண்ட்ராயனை ஏமாற்றி டாஸ்க் செய்ததை ராஜதந்திரம் என்று ஐஸ்வர்யா கூறிக்கொள்கிறார். அதேபோல் பாலாஜி மொட்டையடிக்க ஜனனி ரொம்ப பணிவுடன் கேட்டுக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ரித்விகா டாட்டூ போட்டுக்கொண்டால் விஜயலட்சுமி அடுத்த வாரம் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்படுவார் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. விஜயலட்சுமியை வெளியேற்ற தீவிரமாக இருக்கும் மும்தாஜ், இதனை தடுக்க முயற்சிக்க, அதற்கு ரித்விகா பதிலடி கொடுக்கின்றார். இதனால் மும்தாஜூக்கும் விஜிக்கும் மோதல் முற்றுகிறது. மொத்தத்தில் மொக்கையாக போய்க்கொண்டிருந்த பிக்பாஸ் தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. இனிவரும் ஒருசில வாரங்கள் விறுவிறுப்பின் உச்சகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

செண்ட்ராயனுக்காக ஐஸ்வர்யா செய்வது தியாகமா? நாடகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து போட்டியாளர்களிடையான போட்டியும் கடுமையாகிவிட்டது. சக போட்டியாளர்களை வெளியேற்ற எதையும் செய்ய போட்டியாளர்கள் தயாராகிவிட்டனர்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரஜினி படம் பார்த்ததால் குணமான இதயநோய் சிறுவன்: டாக்டர்கள் ஆச்சரியம்

பெங்களூரை சேர்ந்த சிறுவனுக்கு சமீபத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் தொடர்ந்து ரஜினி படத்தை பார்த்ததால் விரைவில் குணமானதாக

சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட்