மும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரிரு வாரத்தில் முடிவடையவுள்ளதால் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், சக போட்டியாளர்களை வெளியேற்றவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்.
மேலும் இதுநாள் வரை ஒருசிலர் போட்டுவந்த வேடமும் கலைந்துவிட்டது. குறிப்பாக மும்தாஜின் அன்பு நாடகம் புதியதாக வந்த விஜயலட்சுமி மற்றும் ரித்விகாவால் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அதேபோல் அடுத்த வார எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பிக்க போட்டியாளர்கள் ராஜதந்திரம், மோசடி, பணிவு உள்பட அனைத்து முறைகளையும் கையாள தொடங்கிவிட்டனர். செண்ட்ராயனை ஏமாற்றி டாஸ்க் செய்ததை ராஜதந்திரம் என்று ஐஸ்வர்யா கூறிக்கொள்கிறார். அதேபோல் பாலாஜி மொட்டையடிக்க ஜனனி ரொம்ப பணிவுடன் கேட்டுக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ரித்விகா டாட்டூ போட்டுக்கொண்டால் விஜயலட்சுமி அடுத்த வாரம் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்படுவார் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. விஜயலட்சுமியை வெளியேற்ற தீவிரமாக இருக்கும் மும்தாஜ், இதனை தடுக்க முயற்சிக்க, அதற்கு ரித்விகா பதிலடி கொடுக்கின்றார். இதனால் மும்தாஜூக்கும் விஜிக்கும் மோதல் முற்றுகிறது. மொத்தத்தில் மொக்கையாக போய்க்கொண்டிருந்த பிக்பாஸ் தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. இனிவரும் ஒருசில வாரங்கள் விறுவிறுப்பின் உச்சகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜி VS மும்தாஜ்! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/stbAQDCUlB
— Vijay Television (@vijaytelevision) September 5, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments