எக்காரணத்தை கொண்டும் அதை ஸ்டாப் பண்ணவே இல்லை.. யாரை சொல்கிறார் விஜய் வர்மா?

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 84 நாள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 11 பேர் வீட்டில் இருக்கிறார்கள் என்பதும் எனவே அடுத்தடுத்த வாரங்களில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் ’ஒரு போட்டியாளர் எப்போதும் போட்டியையே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கிறார்.

அதற்கு விஷ்ணு விசித்ராவை கூறுகிறார், உடனே விசித்ரா அவரை மிரட்ட, இல்ல அவர் சொல்லட்டும்’ என்று கமல் கூறுகிறார். இதனை அடுத்து தினேஷ் ரவீனாவை கூறுகிறார், ரவீனாவின் சிரிப்பு எப்போதுமே என்னுடைய லூப்பில் ஓடிக்கொண்டே இருக்கும்’ என்று கூறுகிறார்

இதனை அடுத்து ’மாயாவை சொல்லுவேன்’ என்று கூறும் விஜய் வர்மா ’என் வேலை இங்க எண்டர்டெயின் பண்றது, அதை எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டாப் பண்ணவே இல்லை’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து நிக்சன், விஷ்ணுவை கூறுகிறார். ’இந்த வாரம் யாரு, எத்தனை முட்டை என்ற கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார், பசியாக இருக்கிறாரா, டயட்டில் இருக்கிறாரா , என 24 மணி நேரமும் கேம்மை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் என்று கூறுகிறார்’. இதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர்.

மொத்தத்தில் இன்றைய எபிசோடு கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.