close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில்

Saturday, January 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிரி' பொங்கல் திருநாள் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் முக்கிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'கருப்பன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 'றெக்க'' படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதியுடன் மீண்டும் லட்சுமி மேனன் ஜோடி சேர்வதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் நெகட்டிவ் கேர்க்டரில் நடிக்க பாபிசிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா இணையும் மற்றொரு படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment