close
Choose your channels

அஜித் பாணியில் விஜய்சேதுபதி

Tuesday, August 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய தொடர் வெற்றிக்கு காரணம், அவர் தொழிலுக்கு கொடுக்கும் மரியாதை என்றும், தன்னால் படப்பிடிப்பு எந்த விதத்திலும் தாமதம் ஆகக்கூடாது என்கிற நல்ல எண்ணமும்தான் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கே.வி.ஆனந்த் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. ஒருசில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் விஜய்சேதுபதி நடித்து வரும் 'ரெக்க' படத்தின் பாங்காக் படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால், அந்த படத்தின் படப்பிடிப்பு தன்னால் தாமதம் ஆகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் காலில் ஏற்பட்ட சிறு காயத்துடன் பாங்காக் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். 'வேதாளம்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்றும் அஜித், காயத்தை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தது போலவே விஜய்சேதுபதியும் அதே பாணியில் நடித்து கொடுத்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment