ஜெயலலிதா மறைவுக்கு பின் விஜய் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவி சுகம் பெற்று ஒருசிலர் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகிலேயே சிரித்த போஸில் செல்பி எடுத்த கொடிமையை சமூக வலைத்தளங்கள் மூலம் பார்த்தோம். ஆனால் ஜெயலலிதாவால் ஒருசில சோதனைக்கு உள்ளாகியிருந்தாலும் இளையதளபதி விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு ஜெயலலிதா மீது அவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை வெளிக்காட்டியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு முன்னர் 'பைரவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால் அவருடைய மரணம் காரணமாக 'பைரவா' ஆடியோவை விழாவை நிறுத்துமாறும், விழா எதுவும் இன்றி நேரடியாக ஆடியோ சிடிக்களை கடைகளுக்கு அனுப்புமாறும் விஜய் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
என்னதான் முன்னாள் முதல்வர் மீது விஜய்க்கு ஒருசில மனஸ்தாபங்கள் இருந்தாலும் அவரது உடல் முன் நின்று கண்ணீர் வடித்தது போலித்தனம் இல்லாத உண்மையான இரங்கல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் எடுத்த 'பைரவா' ஆடியோ முடிவு ஜெயலலிதா மீது அவர் வைத்திருந்த உண்மையான அன்பை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments