2019-ன் டாப் நம்ம விஜயண்ணா தான்.. ட்ரென்டிங் லிஸ்ட் வெளியிட்ட டிவிட்டர் நிர்வாகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ட்விட்டரின் பொழுதுபோக்கு வகையில் 2019-ஆம் ஆண்டின் அதிகம் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக விஜய்யின் பிகில் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.
ட்விட்டர் இந்தியா சில தினங்களுக்கு முன் சுவாரஸ்யமான தரவுகளுடன் 2019-ஆம் ஆண்டின் நிகழ்வுகளை சுருக்கமாக வெளியிட்டுள்ளது. அவற்றில், 2019-ஆம் ஆண்டின் பொழுதுபோக்குகளில் சிறந்த ட்வீட் இடம் பெற்றுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் தான் அது. விளையாட்டு மற்றும் மாஸ் ஆக்ஷன் படமான பிகிலின் போஸ்டர் வெளியிடப்பட்ட ட்வீட், 2019 ஆம் ஆண்டிற்கான ட்விட்டர் இந்தியாவின் பொழுதுபோக்கு வரிசையில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகியுள்ளது.
மேலும், விஜய்யின் ட்வீட்டே "அதிக கருத்துகளுடன் அதிக ரீ-ட்வீட் பெற்றது, "என்று ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. ட்விட்டர் வெளியிட்ட நிலவரப்படி 101.7 ஆயிரம் ரீ-ட்வீட் மற்றும் 216.4 ஆயிரம் லைக்குகள் இருந்தன என்பது தெரியவந்துள்ளது.
விஜய்யின் பிகில், 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, அக்டோபரில் வெளியான பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ .285-300 கோடி வசூல் செய்யப்பட்டது. இதற்கிடையில், எம்.எஸ்.தோனியின் பிறந்த நாள் குறித்து விராட் கோலியின் ட்வீட் விளையாட்டு வரிசையில் சிறந்த ட்வீட்டாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் போல் தமிழ் பொழுதுபோக்கு பிரகாசம்
— Twitter India (@TwitterIndia) December 10, 2019
மிகவும் மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட், நடிகர் @actorvijay's பிகில் பற்றிய இந்த ட்வீட். #Bigil
மேலும் இதுவே கருத்தோடு அதிக மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆனதுhttps://t.co/EJNKrKiHDB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com