விஜயகுமார் வீட்டில் டும் டும் டும்.. முதல் அழைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜயகுமார் வீட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் பத்திரிகை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராக இருக்கும் விஜயகுமார் ஒரு காலத்தில் ரஜினிக்கு முன்பே ஹீரோவாக நடித்தவர் என்பதும் ரஜினியும் அவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் ரஜினிக்கு அவர் தனது முதல் பத்திரிகை குடும்பத்துடன் சென்று அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகுமார் மகள்களில் ஒருவர் அனிதா, கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தில்லான் என்பவரை திருமணம் செய்யப் போகிறார்.
இதனை அடுத்து விஜயகுமார் தனது மகளுடன் சென்று திரை உலகினருக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் முதல் அழைப்பாக தனது நண்பரான ரஜினி வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்துள்ளார். ரஜினியும் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவேன் என்று வாக்குறுதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments