close
Choose your channels

அமெரிக்காவில் விஜயகாந்த்: அரசியல் களத்தில் விஜய் பிரபாகரன்

Friday, December 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் நடித்து திரையுலகில் காலடி வைத்துள்ள நிலையில் அவருடைய மூத்த மகன் விஜய் பிரபாகரன், அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதி செய்வதை போல் சமீபத்தில் தென்சென்னை தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய் பிரபாகரன், இன்று ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் பிரபாகரன், 'இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை விஜயகாந்த்தின் உடல்நிலை தேறி வருவதாகவும், மீண்டும் கம்பீர குரலில் அவர் விரைவில் திரும்பி வருவார் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment