விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தமிழக மீனவர்கள் அந்தமானில் சிக்கித் தவித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது
இந்த செய்தியை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதுகுறித்து உடனடியாக உதவி செய்ய அந்தமான் தேமுதிக செயலாளருக்கு போன் செய்யுமாறு பிரேமலதாவிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தமானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரன் உடனடியாக அங்கிருந்த தமிழக மீனவர்களை கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments