திடீரென வீதிக்கு வந்த நடிகை விஜயலட்சுமி: ஹரிநாடார் காரணமா? 

  • IndiaGlitz, [Sunday,April 25 2021]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் தரைதளத்தில் நடிகை விஜயலட்சுமி தங்கியிருந்தார். தனது சகோதரியின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துவிட்டு சகோதரியுடன் மீண்டும் அபார்ட்மெண்டுக்கு திரும்பியபோது விஜயலட்சுமி தங்கியிருந்த அறையில் ஆண் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகளிடம் புகார் அளித்து உள்ளார்

மூன்று மாதமாக விஜயலட்சுமி வாடகை தராததால் அறையை ஒரு நபருக்கு ஒதுக்கியதாகவும், அவரது பொருட்களை பக்கத்து அறையில் வைத்திருப்பதாகவும் அபார்ட்மெண்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமான விஜயலட்சுமி தனது பொருட்களை எல்லாம் அறையிலிருந்து வெளியில் தூக்கி வைத்துவிட்டு செய்தியாளர்களை அழைத்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டினார்

ஹரிநாடார் அவர்கள் தான் இந்த அப்பார்ட்மெண்டில் தன்னை தங்க வைத்ததாகவும் தற்போது அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் விஜயலட்சுமி கூறினார். மேலும் யாரோ சிலரின் தூண்டுதலால் தனது பொருட்களை வெளியில் தூக்கிப் போட்டு உள்ளதாகவும் வாடகை பணம் பிரச்சனை என்றால் தன்னை அழைத்தோ அல்லது தன்னை தங்க வைத்த ஹரி நாடார் அவர்களிடம் பேசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.,

இதுகுறித்து அபார்மெண்ட் தரப்பினர் விளக்கமளித்தபோது, ‘கடந்த பிப்ரவரி மாதம் முதல் விஜயலட்சுமி வாடகை பணம் கொடுக்கவில்லை என்றும் அவர் இங்கு வந்து தங்கியிருப்பதற்கும் ஹரிநாடார் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் ஜாவித் என்பவர் தான் விஜயலட்சுமியை அழைத்து வந்து தங்க வைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் விஜயலட்சுமி நாடகம் ஆடுவதாகவும் அப்பார்ட்மெண்ட் உதவியாளர் ஒருவரை விஜயலட்சுமி செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்த தேனாம்பேட்டை காவல்துறையினர் விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.