பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை தொடங்கிய விஜயலட்சுமி

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓரளவுக்கு சுவாரஸ்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த வாரம் மகத் வெளியேறிவிட்டால் அதன் பின்னர் மும்தாஜ் கை ஓங்கி, ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் சிம்மசொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்த நடிகை விஜயலட்சுமியும் தனது ஆட்டத்தை முதல் நாளில் இருந்தே ஆரம்பித்துவிட்டார். மகத்துடன் மோதல் அதிகரித்ததால், டாஸ்க் மட்டுமின்றி அனைத்திலும் ஒதுங்கி இருக்கும் டேனியலை விஜயலட்சுமி தூண்டிவிடுகிறார். உள்ளே ஜெயிக்கத்தானே வந்தீங்க, அப்புறம் போறேன் பொறேன்னு சொன்னா என்ன அர்த்தம், அதுக்கு வராமலேயே இருந்திருக்கலாமே! என்று டேனியலை விஜயலட்சுமி உசுப்பேற்றுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் யாசிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம், 'இனிமேல் டேனியல் என் பக்கமே வரமாட்டான்' என்று மகத், பெருமையாக கூறி வருகிறார். அவர் வரநினைத்தாலும் வரமுடியாது, ஏனெனில் மகத் வெளியேறிவிடுவாய் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

More News

மலையாள சேனல்களில் செய்தியாகிய விஜய் நிவாரண நிதி

கேரளா முழுவதும் சமீபத்தில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடரில் சிக்கியுள்ள அம்மாநில மக்களுக்கு தமிழ் திரையுலகினர் செய்து வரும் உதவிகள் பெரும் ஆறுதலாக உள்ளது.

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்த படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம்

சர்கார் இசை வெளியீடு தேதி குறித்த தகவல்

வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

அஜித்தின் 'விஸ்வாசம்' மும்பையில் நடக்கும் கதையா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் இருந்தது. 

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்: ஒரு முன்னோட்டம்

சிபிஐ அதிகாரியாக நயன்தாராவுக்கும், சைக்கோ கொலைகாரனாக அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை.