விஜயகுமார் பேத்தி திருமணம்.. பந்தக்கால், சுமங்கலி பூஜை.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் வரும் 19ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான பந்தக்கால் மற்றும் சுமங்கலி பூஜை குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா மற்றும் தியான் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருமணம் வரும் 19ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கடந்த சில நாட்களாக விஜயகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை அளித்து வரும் நிலையில் தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் மணமகள் தியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சுமங்கலி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் காட்சிகள் உள்ளது. மேலும் அவர் தன்னுடைய வருங்கால மாப்பிள்ளையுடன் ரொமான்ஸ் உடன் இருக்கும் காட்சிகள் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவில் அண்ணன் அருண் விஜய்யை பார்த்ததும் ஓடிப்போய் தியா பாசத்துடன் கட்டி அணைத்துக் கொண்ட காட்சிகளையும் நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்து மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.