அமெரிக்காவில் இருந்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் ஆழ்ந்த சோகத்துடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்ற கேப்டன் விஜய்காந்த், கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவது:
கலைஞர் இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக என்கிற கட்சியை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் முழுவதும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது. என்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை' என்று கூறி மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் விஜய்காந்த் கதறி அழும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WeiuqmCzkF
— Vijayakant (@iVijayakant) August 8, 2018
Dr.கலைஞர் அவர்களின் மறைவிற்கு, திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கானொளித் தொகுப்பு. pic.twitter.com/z492NplEBD
— Vijayakant (@iVijayakant) August 8, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com