கந்தசஷ்டி கவசம் விவகாரம்: வைரலாகும் கேப்டன் விஜயகாந்தின் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்தசஷ்டிகவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை பதிவு செய்தது என்பதும் இந்த வீடியோவுக்கு இந்து மத ஆதரவாளர்கள், முருக பக்தர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே
மேலும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கந்த சஷ்டி கவசத்தை கடுமையாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் நிர்வாகிகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர் என்பதும் அந்த யூடியூப் சேனல் உள்ள வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்த நிலையில் தற்போது இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்’ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் விஜயகாந்த், கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை படிப்பது போன்ற ஒரு வீடியோவும் அதில் பதிவு செய்யப்பட்டது என்பதும், பின்னணியில் கந்தஷ்டி கவசம் ஒலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்தின் இந்த டுவிட்டர் பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். (2-2)#தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா pic.twitter.com/XILnANEf8A
— Vijayakant (@iVijayakant) July 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout