தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனாவா? மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாகவும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது
விஜயகாந்த் அவர்களுக்கு நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளதால் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @iVijayakant
— R Sarath Kumar (@realsarathkumar) September 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout