நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்

  • IndiaGlitz, [Thursday,October 08 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளும் சூப்பர் ஸ்டார் முதல் நாடக நடிகர்கள் வரை அனைவரின் ஆதரவை பெற தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் விஜயகாந்த், 'நல்லவர்களுக்கு எனது ஆதரவு' என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது தனது சிறப்பான நிர்வாகத்திறனால் அவர் நடிகர் சங்கத்தின் கடன்களை அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.