அதிமுக-பாஜக கூட்டணி: விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜய்காந்தின் தேமுதிக திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருப்பதாகவும், அந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது

இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது